வணக்கம் மக்களே,
உங்கள் அனைவரையும் தமிழ்த் திண்ணைக்கு வரவேற்கிறோம். தமிழரின் வாழ்வியலில் திண்ணையின் பங்கு அதிகம் என்பது நாம் அறிந்ததே. திண்ணையில் அமர்ந்து நண்பர்களுடன் பிடித்த விசயங்களை, நிகழ்வுகளைப் பேசி மகிழ்ந்தது நினைவில் உள்ளதா? இங்கயும் அதைத்தான் செய்ய போகிறோம். வாருங்கள்!!! கதை பேசலாம், கருத்து பரிமாறலாம், நாட்டு நடப்பு தெரிந்து கொள்ளலாம், படித்தவைகளை பகிரலாம். இவற்றோடு மனம் நனைக்க சாரல், அறிவை வளர்க்க வாசிப்போர் களம் என்று திண்ணையில் உங்களுக்காக சுவாரசியமான விசயங்கள் காத்துகொண்டு இருக்கின்றன.
தமிழால் இணைவோம், தமிழுக்காக இணைவோம்....